காபித்தூள் குடிக்க மட்டும்தானா?!

காபி பொடியோடு பட்டை பொடியை சேர்த்து முகத்தில் தேய்த்து கழுவினால் இறந்த செல் நீங்கும். காபி பொடி சிறந்த இயற்கை ஸ்கிரப்பராகும்… வடிகட்டி மிச்சமா நிக்கும் காப்பி பொடியை கண்களின்மீது பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கண்களின் வீக்கம் குறையும்.. காய்ச்சிய பாலுடன், காபி பொடியை குழைத்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி 15நிமிடம் கழித்து கழுவிவர முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச் பளிச்.. ஈரமான தலையில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ்
 
காபித்தூள் குடிக்க மட்டும்தானா?!

காபி பொடியோடு பட்டை பொடியை சேர்த்து முகத்தில் தேய்த்து கழுவினால் இறந்த செல் நீங்கும். காபி பொடி சிறந்த இயற்கை ஸ்கிரப்பராகும்…

வடிகட்டி மிச்சமா நிக்கும் காப்பி பொடியை கண்களின்மீது பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கண்களின் வீக்கம் குறையும்..

காய்ச்சிய பாலுடன், காபி பொடியை குழைத்து பேஸ்டாக்கி முகத்தில் பூசி 15நிமிடம் கழித்து கழுவிவர முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச் பளிச்..

ஈரமான தலையில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்து எப்பயுமே, யூஸ் பண்ணும், ஷாம்பு மற்றும் கண்டிஸ்னர் கொண்டு முடியை அலசினால் இறந்த செல்கள் நீங்கி தலைமுடி பட்டுப்போல் மினுக்கும்.

திக்கான காபி டிக்காஷனை தலையில் தடவி, 10நிமிடங்கழித்து தலைமுடியை அலச தலைமுடி கருமை நிறத்தோடும் அலைபாயும்.

வெயிலில் அலைந்து, அதிகப்படியான மேக்கப் உபயோகத்தினால முகம் கருத்தவங்க, இன்ஸ்டண்ட் காபி பொடியோடு தண்ணி கலந்து பேஸ்டாக்கி முகத்தில் தடவி கழுவ இழந்த நிறம் திரும்ப வரும்.

இன்ஸ்டண்ட் காபி பொடி, அரிசி மாவு, தேன், பால் எல்லாவற்றையும் சமபாகமா எடுத்துக்கொண்டு குழைத்து பேஸ்டாக்கி முகத்தில் தடவி, 10 நிமிடங்கழித்து கழுவினால் கோல்டன் பேசியல் செய்த பொலிவை தரும். எங்காவது விசேசத்துக்கு போகும்முன் இப்படி செய்யலாம். 

காஃபி தூளோடு தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து, அதோடு ஆலீவ் ஆயிலையும் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ, இறந்த செல் நீங்கி முகம் பொலிவு பெறும். 

காபி பொடி , தேங்காய் எண்ணெய், சோற்றுக்கற்றாழையின் ஜெல் இவற்றை குழைந்து பூசிவர நாள்பட்ட தழும்பு மறையும். 

ஒரு லிட்டர் நன்றாய் கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் காபி பொடி போட்டு, நல்ல கனமான பெட்ஷீட்டால் மூடி ஆவி பிடிக்க தீராத தலைவலி தீரும்.

From around the web