தலைமுடி உதிர்வுக்கான தீர்வு தரும் வெண்ணெய் ஹேர்பேக்!
 

தலைமுடி உதிர்வுக்குத் தீர்வுதரும் ஹேர்பேக்குகளில் ஒரு ஹேர்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்றும், பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

 
தலைமுடி உதிர்வுக்கான தீர்வு தரும் வெண்ணெய் ஹேர்பேக்!

தேவையானவை:
வெண்ணெய்- 2 ஸ்பூன்
பால்- கால் கப்
ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்
விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் வெண்ணெயினைப் போட்டு பால் ஊற்றி ஸ்பூன் கொண்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அடித்த கலவையுடன் ஆலிவ் ஆயில் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிரும் பிரச்சினையானது தீர்வுக்கு வரும்.
 

From around the web