தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஆவாரம்பூ ஹேர் ஆயில்!
 

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஹேர் ஆயிலை நாம் இப்போது ஆவாரம்பூ கொண்டு தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

 
தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் ஆவாரம்பூ ஹேர் ஆயில்!

தேவையானவை:
ஆவாரம்பூ- கைப்பிடியளவு
ஆவாரம் இலை- கைப்பிடியளவு
ஆவாரம்பூ விதை- சிறிதளவு
ஆவாரம் பட்டை- 2
தேங்காய் எண்ணெய்- கால் லிட்டர்

செய்முறை:
1.    ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதனை நன்கு கொதிக்கவிட்டு ஆறவிடவும்.
2.    அடுத்து அத்துடன் ஆவாரம் இலை, ஆவாரம்பூ, ஆவாரம் விதை, ஆவாரம் பட்டை போன்ற அனைத்தையும் தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவிடவும்.
3.    4 நாட்கள் கழித்து எண்ணெயினை மீண்டும் கொதிக்கவிட்டு ஆறவிட்டு வடிகட்டினால் ஆவாரம்பூ ஹேர் ஆயில் ரெடி.
 

From around the web