தலைமுடி உதிர்வினை சரிசெய்யும் கற்றாழை ஹேர்பேக்!!
 

தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் தன்மை கொண்டது கற்றாழை. இத்தகைய கற்றாழையினைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வானது சரியாகும்.

 
தலைமுடி உதிர்வினை சரிசெய்யும் கற்றாழை ஹேர்பேக்!!

தேவையானவை:
கற்றாழை – 1 துண்டு
ஆப்பிள் சீடர் வினிகர்- 2 ஸ்பூன்
விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    கற்றாழை துண்டினை கழுவி இருபுறமும் உள்ள தோலினை நீக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து கற்றாழையின் சதைப்பற்றினை மிக்சியில் போட்டு ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
3.    அடுத்து விளக்கெண்ணெயினை சூடேற்றி இந்தக் கலவையில் போட்டு குழைத்துப் பயன்படுத்தவும்.
இந்த ஹேர் மாஸ்க்கினை தலைமுடியில் தேய்த்து குளித்துவந்தால் தலைமுடி உதிர்வு சரியாகும்.
 

From around the web