முகத்தின் வறட்சியினைக் காணாமல் போக்கும் பாதாம் ஃபேஸ்பேக்!!
 

முகத்தின் வறட்சியால் முகத்தில் ஆங்காங்கு வெள்ளைத் தன்மையுடன் தோல் இருப்பதால் கஷ்டப்படுபவர்களா இருந்தால் நீங்கள் இந்த பாதாம் ஃபேஸ்பேக்கினை எடுத்துக் கொள்ளலாம்.

 

தேவையானவை:
பாதாம்- 5
ஆலிவ் ஆயில்- 2 ஸ்பூன்
விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    பாதாமை வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து ஒரு கிண்ணத்தில் பாதாம் பொடியினைப் போட்டு ஆலிவ் ஆயில் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்துக் கலந்தால் பாதாம் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த பாதாம் ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்தால் முகத்தின் வறட்சியானது சரியாகும்.
 

From around the web