வேற லெவல்..!!! திருச்சிற்றம்பலம் படத்தின் Lifeof Pazham பாடல் வெளியீடு!!!

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் படமானது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

தனுஷ், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ல இப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி இந்தப் படம் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களினால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிளான லைப் ஆஃப் பழம் பாடல் வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது. அதோடு நாளைய தினத்தில் தனுஷ் தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவருடைய ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment