Connect with us

இந்தியர்களின் ஆயுட்காலம் குறையும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

life

செய்திகள்

இந்தியர்களின் ஆயுட்காலம் குறையும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

காற்று மாசுபாடு அதிகரிப்பால் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 5 ஆண்டு குறையும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காற்றின் தரத்தால் மனிதனின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைகழகம் ஆய்வு நடத்தியது. இதில் மாசு நிறைந்த நாடுகளில் இந்தியா 2வது இடத்தை பிடித்து இருப்பதாக கூறியுள்ளது.

அதோடு காற்று மாசுபாட்டிற்கு வாகனங்கள் முக்கிய காரணமாக இருப்பதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறையும் என தெரிவித்துள்ளது.

அதிகப்பட்சமாக தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உ.பி மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பீகார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் வாழும் மக்களின் ஆயுட்காலம் சராசரியாக இரண்டு ஆண்டுகள் குறையும் என்றும் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 2.5 ஆண்டுகள் ஆயுட்காலம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்களின் ஆயுட் காலம் 0.5 ஆண்டுகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top