
தமிழகம்
பேரறிவாளன் விடுதலை விவகாரம்;; சுப்ரீம் கோர்ட் பகீர் கேள்வி !!
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு மனுதாக்கல் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஆளுநருக்கு முழு உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்தது.
இந்நிலையில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று சூடுபிடிக்க தொடங்கியது. இதில் பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் செயல் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை எந்த சட்டத்தின் படி ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஆளுநர் மசோதாக்களை அனுப்பி வைக்கலாம் என்றும் கொலை குற்றம் தொடர்பாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதற்கு அதிகாரம் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் உத்தரவுக்காக எத்தனை முறை வழக்கை தள்ளிவைப்பது என்ற கேள்வியும் உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
