Connect with us

இது இந்தியாதான்.. ‘ஹிந்தி’யா அல்ல! தமிழக முதல்வர் அமித்ஷா-வுக்கு கடிதம்!!

stalin

தமிழகம்

இது இந்தியாதான்.. ‘ஹிந்தி’யா அல்ல! தமிழக முதல்வர் அமித்ஷா-வுக்கு கடிதம்!!

இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தி மொழியானது சட்டப்படியான தேசிய மொழி அல்ல, அதுமட்டுமே ஆட்சி மொழி அல்ல என கூறிய தமிழக முதல்வர் நாட்டின் அழுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

அதே மொழியாக உள்ள இந்தியானது அலுவல் மொழியாக உயர்த்தி, இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை கடிதத்தின் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே போல் உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளை இணைத்து ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக விரைவில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை ‘ஹிந்தி’யா என்ற பெயரில் பிளவுபடுத்திப் பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என்றும் இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top