நேற்று நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி! இன்று குடும்பத்தினருக்கு இரங்கல் கடிதம்!!: ஸ்டாலின்;

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

முப்படை தலைமை தளபதி

இந்தநிலையில் நேற்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இருந்தார். தற்போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கடிதம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அதன்படி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தனித்தனியே முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடினமான நேரத்தில் மக்கள் அனைவரும் இறந்தோரின் குடும்பத்தினருடன் துணை நிற்கின்றனர் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஈடு செய்ய முடியாத இழப்பிலிருந்து மீண்டும் வர தைரியத்தை பெற வேண்டி முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment