பண்டிகை நெருங்கிவிட்டது; 100 நாள் வேலைக்கு சம்பளம் போடணும்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழக முதல்வர் முகஸ்டாலின் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் 100 நாள் வேலை திட்டத்தை குறித்ததாக காணப்படுகிறது. அதன்படி மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.ஸ்டாலின்

2021-2022 ஆம்  நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு 3524.69 கோடி ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட்டது என்று கூறுகிறார். ஒன்றிய அரசு விடுவித்த தொகை முழுவதும் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1178.12 கோடி ஊதியம் நிலுவையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நூறு நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கப்படாததால் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படாவிட்டால் கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி வேலை தேடி வர இது வழிவகுக்கும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதனால் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை உடனே வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு உடனே வழங்க முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment