Connect with us

ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம்! நீட் வர இவர்கள்தான் காரணம்: ஈபிஎஸ்

ஈபிஎஸ்

தமிழகம்

ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம்! நீட் வர இவர்கள்தான் காரணம்: ஈபிஎஸ்

ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம்! நீட் வர இவர்கள்தான் காரணம்: ஈபிஎஸ்

தமிழகமே மிகவும் எதிர்பார்த்திருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி  வருகின்ற சனிக்கிழமை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. எதிர்பார்ப்புகளை விட அதிகளவு கோரிக்கைகளை மக்கள் வைக்கின்றனர். இந்த நிலையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் மும்முரம் காட்டி கொண்டு வருகிறது.

குறிப்பாக எதிர்க்கட்சியின் இரு பெரும் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப்படி தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கும்பகோணம் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார் .

அப்போது பேசிய அவர் அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்தியாவில் நீட் தேர்வு வர காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top