Connect with us

ஆரம்பிச்சுடாங்கப்பா… ஈபிஎஸின் எடப்பாடி தொகுதியிலே நுழைந்த ஓபிஎஸின் ஆதரவு… உட்கட்சி பூசலின் உச்சம்..!

eps ops main 750

செய்திகள்

ஆரம்பிச்சுடாங்கப்பா… ஈபிஎஸின் எடப்பாடி தொகுதியிலே நுழைந்த ஓபிஎஸின் ஆதரவு… உட்கட்சி பூசலின் உச்சம்..!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரின் சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிமுகவினர் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதால் அரசு விழாவில் ஊராட்சி மன்ற தலைவரை புறக்கணித்த அதிமுக நிர்வாகிகள், அடிப்படை வசதிகள் இன்றி திறக்கபட்ட கட்டிடங்கள்…..

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை குறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடிவரும் நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக வினரிடையே மற்றொரு சம்பவம் நடந்துள்ளது….

தமிழக எதிர்க்கட்சி தலைவரின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கோரணம்பட்டி ஊராட்சயில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தலா மூன்று அங்கன்வாடி கட்டிடங்கள் கோரணம்பட்டி, ராயணம்பட்டி, நாச்சனூர், உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் முடிந்து மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யபடாமலே அவசரகதியில் திறப்பு விழா நடைபெற்றது….

இந்நிகழ்ச்சியில் கொங்கணாபுரம் ஊரட்சி ஒன்றிய தலைவர் அதிமுகவை சேர்ந்த கரட்டூர் மணி, குத்துவிளக்கேற்றி மூன்று அங்கன்வாடி கட்டிடங்களையும் இன்று திறந்து வைத்தார்…

இதனிடையே சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு அழைப்பு விடுக்காமல் ஊராட்சி ஒன்றிய தலைவர் அங்கன்வாடி கட்டிடங்களை திறக்கப்பட்ட சம்பவத்தால் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது…

மேலும் அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ரூபாய் 30, லட்சம் மதிப்பீட்டில் அதிக தொகை கணக்கில் வைத்தும் கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….

தொடர்ந்து இதுகுறித்து கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், சேலம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளார்…

மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது நான் கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக மக்கள் பணியாற்றி வருகிறேன் கோரணம்பட்டி ஊராட்சியில் புதிதாக மூன்று அங்கன்வாடி மையம் நேன்று (26-08-2022) திறக்கப்பட்டுள்ளது ஊராட்சி மன்ற தலைவர் என்கின்ற முறையில் எனக்கு எவ்வித அழைப்பும் கொடுக்கப்படவில்லை எனவும் எனவே மாவட்ட ஆட்சியர் முறையான விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது…..

தமிழக எதிர்க்கட்சித் தலைவரின் சொந்த தொகுதியிலேயே அதிமுகவினருக்கிடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதால் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது…

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top