ஜோதிடத்தில் எத்தனை வகை திதிகள் உள்ளன என்பதை பற்றி பார்ப்போமா….

ffda522e3c333895725d2ce968e9b45b

நாம் அனைவருக்கும் ஜோதிடம் பற்றி முழுமையாக தெரியாவிட்டாலும், ஓரளவு தெரிந்திருக்கும். அப்படி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள திதிகள் பற்றி இன்று பார்ப்போம். 

திதி என்றாலே நம் நினைவிற்கு வருவது குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு கொடுக்கும் திதி தான். 

ஒரு மாதத்தில் முப்பது திதிகள் வருகின்றன. அவற்றை வளர்பிறை திதிகள் என்றும் மற்றும் தேய்பிறை திதிகள் என்றும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 

அதாவது அமாவாசைக்கு பின், பௌர்ணமிக்கு முன் வருகின்ற திதிகள் வளர்பிறை திதிகள் எனவும், பௌர்ணமிக்கு பின், அமாவாசைக்கு முன் வருகின்ற திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த திதி நாளன்று அந்தந்த திதிகளுக்கு ஏற்ற தேவதைகளை வணங்கி அவர்களுக்குரிய சில காரியங்களை நாம் செய்யும் போது பல பலன்களை அடையலாம். 

இந்த திதிகளில் பிரதமை திதி என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா…

பிரதமை திதி என்பது அக்னி பகவானுக்கு உகந்ததாகும். இந்த திதி நாள் புதிதாக நாம் வீடு கட்டுவதற்கும், அல்லது புதிதாக தொழில் கட்டடங்கள் திறப்பதற்கும் மற்றும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் மிகவும் ஏற்றது. 

அதாவது இந்த பிரதமை திதி நாளன்று அக்னி போன்ற நெருப்பு தொடர்புடைய காரியங்களை செய்வது மிகவும் நல்லது.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews