News
அத்தைக்கு மீசை முளைகட்டும்; பின்னர் பார்க்கலாம்!!
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது அதிமுக. மேலும் அதிமுக தற்போது தமிழகத்தில் எதிர்க் கட்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .மேலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் இந்த கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வரிசையில் அதிமுகவில் நீண்ட நாட்களாக அமைச்சராக இருந்தவரும் முந்தைய மீன்வளத் துறை அமைச்சருமான ஜெயக்குமார் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார்.
இது பலருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியது. ஆயினும் அவர் அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தார். இந்த சூழலில் தற்போது அவர் அத்தைக்கு மீசை முளைக்கும் என்று கூறியுள்ளார் .அதன்படி அவரிடம் கொங்குநாடு பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அத்தைக்கு மீசை முளைக்கும் பின்னர் பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்.
மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் இதுதான் தற்போதைய அதிமுக வின் நிலை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அனைத்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவில் உள்ள அதிமுகவின் ஜெயக்குமார் இதனை சென்னையில் பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.
