Connect with us

“புகைப்பிடித்தலை கைவிட்டு நுரையீரலைப் பாதுகாப்போம்”-கோரிக்கை ஓபிஎஸ்!

News

“புகைப்பிடித்தலை கைவிட்டு நுரையீரலைப் பாதுகாப்போம்”-கோரிக்கை ஓபிஎஸ்!

b3101557c4cd70d6ff09f46f6bb72772-1

தற்போது உலகத்தில் பலர் தீய பழக்கத்திற்கு அடிமையாக காணப்படுகின்றனர். அதுவும் குறிப்பாக போதைப் பொருட்களுக்கு பலரும் அடிமையாக காணப்படுவது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தியாவிலும் கூட புகைபிடித்தல், புகையிலை பழக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் வேதனை என்னவென்றால் பள்ளி மாணவர்கள் கூட தற்போது புகை பிடித்தல், புகையிலை, மதுபானம் போன்றவற்றிற்கு அடிமையாக காணப்பட்டு வருகின்றனர்.abe61e201cd55b249049d55fe7c805cf

மேலும் இந்த புகைபிடிப்பதால் பெரும்பாலும் மனிதனின் நுரையீரல்  பாதிக்கப்படுகிறது. மேலும் புகைப்பிடிப்போரிடம்  இருப்பவர்களுக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இந்த நிலையில் உலகம் முழுவதும் இன்றைய தினம் உலக நுரையீரல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உலக சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி உலக நுரையீரல் தினத்தில் புகைப்பிடித்தலை புறக்கணிப்போம் என்ற உறுதி மொழியை அனைவரும் எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் புகைப்பிடித்தலை கைவிடுவோம், நுரையீரலைப் பாதுகாப்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top