அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியை கற்போம்!: விஜயகாந்த்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தி மொழியை அனைவரும் கற்க வலியுறுத்தி இருந்தார். இத்தகைய கருத்து இந்தியாவெங்கும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் இருந்து ஸ்டாலின் அமிர்ஷா கூறுவது இந்தி மாநிலம் மட்டும் போதும் இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்பது போல் நினைக்கிறார் என்று கூறியிருந்தார்.
அதோடு மட்டுமில்லாமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவின் கருத்துக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழகத்தில் மக்களால் கேப்டன் என்று அழைக்கப்படுகின்ற விஜயகாந்த் இதுபற்றி கருத்து கூறியுள்ளார்,
அதன்படி அன்னை மொழியை காப்போம் அனைத்து மொழியைக் கற்போம் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். தாய்மொழியான தமிழை தவிர்த்து ஆங்கிலத்திற்கு மாற்று வழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
