Connect with us

ட்விட்டரை ஜாலியாக வைத்திருப்போம்-நம்பர் 1 பணக்காரர் எலன் ட்விட்;

elon musck

செய்திகள்

ட்விட்டரை ஜாலியாக வைத்திருப்போம்-நம்பர் 1 பணக்காரர் எலன் ட்விட்;

தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரராக உருவாக்கியுள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மாஸ்க். இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் எலன் மாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதாகத் தெரிகிறது. வாங்கியதோடு மட்டுமில்லாமல் தன்னைப் பற்றி கருத்து கூறுபவர்கள் கண்டிப்பாக ட்விட்டரில் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றும் தன்னை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ட்விட்டரை  ஜாலியாக வைத்து இருப்போம் என்றும் கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தமான ட்விட்டரை  மகிழ்ச்சிக்காக அதிகம் பயன்படுத்துவோம் என டுவிட் செய்துள்ளார் எலன் மாஸ்க் .

பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க அரசியல்ரீதியாக ட்விட்டர் நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நடுநிலையாக இருந்தால் தீவிர வலதுசாரியோ தீவிர இடதுசாரியோ கோபம் தான் அடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top