Connect with us

வேற்றுமையும், வெறுப்பும் நீங்கி ஒற்றுமையோடு இருப்போம்!!-முதல்வர் ஸ்டாலினின் ஈஸ்டர் வாழ்த்து;

stalin cm

தமிழகம்

வேற்றுமையும், வெறுப்பும் நீங்கி ஒற்றுமையோடு இருப்போம்!!-முதல்வர் ஸ்டாலினின் ஈஸ்டர் வாழ்த்து;

வேற்றுமையும், வெறுப்பும் நீங்கி ஒற்றுமையோடு இருப்போம்!!-முதல்வர் ஸ்டாலினின் ஈஸ்டர் வாழ்த்து;

இன்றைய தினம் உலகமெங்கும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஈஸ்டர் பண்டிகை ஆனது மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறிக்கும் பண்டிகையாக காணப்படுகிறது.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுவும் குறிப்பாக உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் பக்தர்கள் வரிசையாக ஊர்வலம் சென்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் இயேசு பெருமான் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். வேற்றுமைகளும், வெறுப்பும் நீங்கி அன்பும், ஒற்றுமையும்மேலோங்கிடும் சமுதாயத்தை படைக்க உறுதி ஏற்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top