இயேசு கிறிஸ்து கூறிய போதனைகளை கடைபிடிப்போம்! தமிழக ஆளுநரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!

நாளைய தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாக காணப்படுகிறது. ஏனென்றால் நாளைய தினம் உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மத்தியில் முக்கியமான பிரதான பண்டிகையாக கிறிஸ்துமஸ் அமைந்துள்ளது.

கிறிஸ்துமஸ்

இதற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்களில் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று காலை வைகோ எம்.பி மற்றும் ஜி.கே.வாசன் ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை முழுமையாக கடைபிடிப்போம்; நம்மை காட்டிலும் வறியவர்களிடத்தில் கருணை புரிவோம் என்று ஆளுநர் என்று கூறினார். அமைதி, பொறுமை, நல்லிணக்கம் என்னும் வலுவான அடித்தளத்தில் சிறப்பான உலகை கட்டமைக்க நம்மால் இயன்ற வகையில் பங்காற்றும் என்றும் தமிழக ஆளுநர் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment