Connect with us

குண்டர் சட்டத்தில் கைது செய்வோம்: தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகம்

குண்டர் சட்டத்தில் கைது செய்வோம்: தமிழக அரசு எச்சரிக்கை!

84458bf0ff8a19f87fefd9b36df15265

கலப்பட டீசல் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல் உள்பட ஒருசில பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வாகனங்கள் பழுதாகும் ஆபத்து இருப்பதால் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் டிஜிபி உத்தரவுபடி பல பெட்ரோல் பங்குகள் நேரடியாக சோதனை செய்யப்பட்டன

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் கலப்பட டீசல் ஏற்றி வந்த 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கலப்பட டீசல் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top