Connect with us

ஐரோப்பிய நாடுகள் ப்ளீஸ் இனியும் தாமதம் செய்யாமல் ஆயுதங்கள் கொடுங்கள்!!:ஜெலன்ஸ்கி;

zelensky

செய்திகள்

ஐரோப்பிய நாடுகள் ப்ளீஸ் இனியும் தாமதம் செய்யாமல் ஆயுதங்கள் கொடுங்கள்!!:ஜெலன்ஸ்கி;

ஐரோப்பிய நாடுகள் ப்ளீஸ் இனியும் தாமதம் செய்யாமல் ஆயுதங்கள் கொடுங்கள்!!:ஜெலன்ஸ்கி;

தற்போது ரஷ்யா மரியுபோல் நகரை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மரியுபோல் நகரம் கருங்கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புட்டின் பொதுமக்கள் வெளியே வந்தால் தங்கள் கைகளில் வெள்ளை துணியை கட்டி விட்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் நகரை சுற்றி ராணுவ பாதுகாப்பு அதிகமாக உள்ளதால் தங்களை மீறி ஈ கூட நுழையாத அளவிற்கு காணப்படுகிறோம் என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மரியுபோல் நகரில் சிக்கியுள்ள ராணுவத்தினர் மற்றும் மக்களை பத்திரமாக மீட்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மக்களை மீட்க தங்கள் பிடியில் உள்ள ரஷ்ய ராணுவத்தினரை விடுவிக்க தயார் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். மரியுபோல் வீழ்ந்துவிட்ட நிலையில் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

டன்பாஸ் நகரை கைப்பற்ற கனரக ஆயுதங்களை வழங்குவதில் ஐரோப்பிய நாடுகள் இனியும் தாமதம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top