இந்த கல்வி ஆண்டில் பாடங்கள் குறைக்கப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

bbd4d5bf72beae205750431c23257e20-1-2

ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் இந்த கல்வியாண்டில் குறைக்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதை அடுத்து மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது

நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இப்போதைக்கு 9 முதல் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்முறை தேர்வு மற்றும் தேர்வு என இரண்டு பிரிவுகளாக மதிப்பெண் வழங்கப்படும் என்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் குறித்த அறிவிப்புகள் சிபிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளதளமான  www.cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment