Connect with us

ஆட்சிக்கு வந்து ஓராண்டு கூட ஆகவில்லை; ஆனால் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு..!!

10

தமிழகம்

ஆட்சிக்கு வந்து ஓராண்டு கூட ஆகவில்லை; ஆனால் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு..!!

ஆட்சிக்கு வந்து ஓராண்டு கூட ஆகவில்லை; ஆனால் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு..!!

நம் தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்து உள்ளது. அதுவும் குறிப்பாக முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் ஸ்டாலின்.

அவர் பொறுப்பேற்று ஒரு ஆண்டு கூட நிறைவு பெறாத வகையில் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து மக்களிடையே அதிகம் பேசப்பட்ட முதல்வராக காணப்படுகிறார். அதுவும் குறிப்பாக விவசாயிகளுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதன்படி மின் இணைப்பு மூலம் விவசாயிகள் பெரும் பலனை அரசுக்கு கிடைக்கும் பாராட்டு பத்திரம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் விவசாயிகளிடம் கலந்துரையாடிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.

ஓர் ஆண்டுக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தந்து திமுக சாதனை படைத்துள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். முதல்வர் ஒரு லட்சமாவது விவசாயி உளுந்தூர்பேட்டை கண்ண பிள்ளைக்கு மின் இணைப்பு ஆணை வழங்கினார்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் 2021  செப்டம்பர் 23ம் தேதியிலிருந்து துவக்கி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top