Connect with us

விவசாய நிலத்தில் மர்மமாக செத்துக்கிடக்கும் சிறுத்தை.. பீதியில் ஊர்மக்கள்

Leopard

செய்திகள்

விவசாய நிலத்தில் மர்மமாக செத்துக்கிடக்கும் சிறுத்தை.. பீதியில் ஊர்மக்கள்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததா? அல்லது விஷம் வைத்துக்கொள்ளப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

தமிழ்நாடு ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பேர்ணாம்பட்டு காப்புக்காடுகளில் ஐந்து சிறுத்தைகள் இருந்த நிலையில் தற்பொழுது அதில் ஒரு சிறுத்தை மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட எருக்கம்பட்டு, சாரங்கல் சாத்கர், கலர்ஸ்பாளையம் உள்ளிட்ட வனத்தை ஒட்டி உள்ள கிராமங்களில் அடிக்கடி சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கலர்ஸ் பாளையம் கிராமத்தில் வழி தவறி வந்த சிறுத்தை ஒன்று வீட்டினுள் புகுந்து மூன்று பேரை தாக்கியது. பின்னர் ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி சிறுத்தை பிடித்து அடர் வனத்தில் கொண்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் பேரணாம்பட்டு வனச்சரகத்திற்குட்பட்ட வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள சாரங்கள் கிராமத்தை சேர்ந்த துரைசாமி என்பவரது விவசாய நிலத்தில் இன்று இரவு சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்த கிடந்தது. இதே தொடர்பாக தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு வரத்துறையினர் விவசாய நிலத்தில் இருந்து கடந்த சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததா? அல்லது விஷம் வைத்துக்கொள்ளப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து சிறுத்தையின் பிரேத பரிசோதனைக்கு பின்பு தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top