News
குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை: சமயோசிதமாக கூண்டு வைத்த பிடித்த வனத்துறையினர்

பொது மக்கள் அதிகம் வாழும் குடியிருப்பு பகுதியில் திடீரென சிறுத்தை ஒன்று புகுந்ததால், அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் இருந்தனர். இதனை அடுத்து வனத்துறையினர் சமயோசிதமாக கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடித்துள்ளனர்
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சிம்லா என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் தெருக்களில் நடமாட்டம் இல்லாததால் அருகிலுள்ள வனத்திலிருந்து சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்தது

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர் இந்த நிலையில் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது
இதனை அடுத்து ராம்பூர் மாவட்ட வனத்துறையினர் அதிரடியாக கிராமத்திற்கு சென்று கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடிக்கனர். இதனையடுத்து அந்த சிறுத்தை வனத்துறையினர்களால் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னரே அந்த கிராமத்து மக்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதியில் சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றிக் கொண்டிருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
