லியோ டிரெய்லர் நாளைக்கு பண்ண போற சாதனைகள்… முதலிடத்தைப் பிடிப்பாரா விஜய்..!

நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தின் டிரைலர் நாளை சன் டிவி யூடியூப்-இல் வெளியாகப் போகிறது. லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருந்தால் இந்நேரம் ஒரு வாரத்திற்கு அந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய பேச்சுக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி இருக்கும், ஏகப்பட்ட விவாதங்கள், டி கோடிங், மீம்கள், ட்ரோல்கள் என லியோ படத்தின் புரமோஷனே கலை கட்டியிருக்கும்.

ஆனால், திட்டமிட்ட படி லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியவில்லை. இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் லியோ படக்குழுவினருக்கு இருக்கும் ஒரே ஆயுதம் லியோ படத்தின் டிரைலர் வெளியீடு தான்.

லியோ டிரெய்லர் நாளை ரிலீஸ்

அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை சன் டிவி யூடியூப் சேனல் லியோ படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரிலும் லியோ படத்தின் டிரைலர் கொண்டாட்டம் திறந்தவெளியில் நடப்பதற்கு போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து லியோ படத்தின் டிரைலர் கொண்டாட்டத்திற்கான பர்மிஷன் வாங்குவதற்காக முயற்சி செய்து வருவதாக ரேவந்த் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்துள்ளார். கண்டிப்பாக போலீஸ் பர்மிஷன் கிடைக்காது என விஜய் ரசிகர்களே அதற்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பெரிய புரமோஷன்

ஆனால், எத்தனை தடைகள் வந்தாலும் நாளை மாலை லியோ டிரைலர் வெளியான பின்னர் நடக்கப்போவது வேற மாதிரியான ஆட்டம் என விஜய் ரசிகர்கள் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.

லியோ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனால் போதும் ஒட்டுமொத்த புரமோஷன் களையும் ஒரே நேரத்தில் செய்து இந்திய அளவில் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பை கொண்டு வந்து சேர்த்துவிடும்.

தியேட்டர் தெறிக்கும்

நடிகர் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், அனுராக் காசிப், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கு முன் தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை விஜய் பிடிப்பார் என்றும் உறுதியாக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

நாளை வெளியாகும் லியோ திரைப்படத்தின் டிரைலர் அதற்கான பதிலாக அமையும் என்றே கூறுகின்றனர். அதே சமயத்தில் லியோ டிரைலரை ஓடவிடாமல் செய்யவும் அதன் மீது நெகட்டிவ் கருத்துக்களை பரப்பவும் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் பக்கா பிளான் போட்டு இன்னொரு பக்கம் வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...