அதுக்குள்ள இத்தனை மில்லியன் வியூஸா.. யூடியூபை திணறடிக்கும் லியோ டிரெய்லர்..!

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

லியோ படத்தை பிரமோட் செய்ய அமௌன்ட் ஆக இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்த நிலையில், விஜய் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் கூடுவார்கள் என்றும் அதனால் பொதுமக்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட இன்னல்கள் உருவாகும் என்பதால் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்கிற முடிவுக்கு நடிகர் விஜய் வந்துவிட்டார்.

லியோ டிரெய்லர் சாதனை:

இந்நிலையில், லியோ படத்தின் புரமோஷனுக்கு ஒரே பிரம்மாஸ்திரம் இருந்த லியோ டிரைலர் நேற்று திட்டமிட்டபடி மாலை 6:30 மணிக்கு வெளியானது. லியோ டிரைலர் எதிர்பார்த்ததைவிட ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்து விட்டது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் மற்றும் லியோ படக்குழுவினரை எந்த அளவுக்கு வேலை வாங்கியுள்ளார் என்பதை டிரைலரை பார்த்தாலே தெரிகிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லியோ படத்தின் டிரைலர் ரிலீஸை முன்னிட்டு சென்னை ரோகினி திரையரங்கில் ரசிகர்களுக்காக தியேட்டரில் லியோ டிரைலர் திரையிடப்பட்டது. வழக்கமாக, தியேட்டருக்கு வெளியில் வளாகத்தில் பிரம்மாண்ட ஸ்கிரீனில் தான் லீவ் டிரைலர் திரையிடப்படும். ஆனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினால் டிராபிக் ஜாம் உள்ளிட்ட தொல்லைகள் ஏற்படும் என்பதால் போலீஸ் அனுமதி வழங்கவில்லை.

ரோகினி தியேட்டர் சூறையாடல்

இந்நிலையில் லியோ டிரைலர் ரோகினி திரையரங்கில் திரையிடப்பட்ட நிலையில் ஏகப்பட்ட ரசிகர்கள் முந்தி அடித்துக் கொண்டு உள்ளே நுழைந்ததால், ரோகினி தியேட்டரில் இருந்த இப்படியான சீட்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன.

இது ஒருபக்கம் இருக்க, லியோ படத்தின் டிரைலரில் நடிகர் விஜய் பேசும் ஆபாச வசனம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கான கண்டனங்களும் ஒரு பக்கம் குவிந்து வருகின்றன.

30 மில்லியன் வியூஸ்

ஆனால் அதையெல்லாம் மீறி லியோ படத்தின் டிரைலர் யூடியூப் இல் அதிரடி சாதனையை நிகழ்த்தி வருகிறது. டிரைலர் வெளியான ஐந்து நிமிடத்திலேயே ஒரு மில்லியன் வியூஸ் அதாவது சுமார் 10 லட்சம் பேர் சன் டிவி யூடியூப் இல் அந்த டிரைலரை பார்த்ததாக அபூர்வ அறிவிப்பை சன் டிவி வெளியிட்டுள்ளது.

F7vAe8IXMAAZbW

மேலும், சில மணி நேரங்களிலேயே 10 மில்லியன், 15 மில்லியன் என வியூஸ் விண்ணை தொட்டு வந்த நிலையில், 17 மணி நேரத்தில் அதிகபட்சமாக 30 மில்லியன் வியூஸை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரத்தில் மொத்தம் 50 மில்லியன் வியூஸை லியோ தமிழ் டிரைலர் பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழ் மொழியை தவிர்த்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் லியோ டிரைலர் சக்கை போடு போட்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...