பல ராஜாக்களை பார்த்தாச்சு… லியோ செகண்ட் சிங்கிள் சும்மா வெயிட்டா வந்துருக்கு பாருங்க..!

லியோ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. பேடாஸுமா லியோ தாஸுமா என ஆரம்பமாகும் பாடலில் ஜெயிலர் படத்தின் ஹுகும் பாடலை எப்படி தெறிமாஸாக போட்டிருந்தாரோ அதே போல தென்னை மரத்துல ஒரு குத்து பனை மரத்துல ஒரு குத்து என அனிருத் இந்தப் பாடலை குத்து குத்துவென குத்தி இருக்கிறார்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா 30-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்கிற தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் என யாருமே பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நியூ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடிகர் விஜய் ரத்து செய்துவிட்டார்.

குட்டி ஸ்டோரியை கேட்க முடியவில்லையே என புலம்பிக் கொண்டிருந்த ரசிகர்களை ஆசுவாசப்படுத்த அதிரடியாக லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ஆன பேடாஸ் பாடலை அனிருத் வெறித்தனமாக பாடி வெளியிட்டுள்ளார்.

பல ராஜாக்களை பார்த்தாச்சு, வால சுருட்டிட்டு இரு போன்ற பஞ்ச் வரிகளுடன் வெளியாகி உள்ள இந்த பாடல் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் லியோ தான் டிரெண்டாகி வரும் நிலையில், லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ஏகப்பட்ட சாதனைகளை அடுத்த 24 மணி நேரத்தில் செய்து தெறிக்கவிடும் என விஜய் ரசிகர்கள் வெறிகொண்டு அந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஒரே இடத்தில் அட்டெண்டன்ஸ் போட்டு லியோ பாடலை பார்த்து யூடியூபில் புதிய சாதனையை படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது லியோ படத்தின் டிரெய்லரை தான் என்றும் வரும் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி டிரெய்லரை ரிலீஸ் செய்ய லியோ படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ செகண்ட் சிங்கிள் மூலம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான மோதல் தான் படத்தின் கதை என்பது ஓரளவுக்கு தெரிகிறது.

வரும் அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைக்குமா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் தரப்பில் இருந்து எழுப்பி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...