லியோ படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம்!

Leo Review: தளபதி விஜய்யின் ‘லியோ’ படம் இன்று ரிலீஸானது. மற்ற மாநிலங்களில், வெளிநாடுகளில் 4 மணிக்கே வெளியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் ‘ஷோ’ 9 மணிக்கு என்று  தமிழக அரசு அறிவித்திருந்தது.

தளபதியின் ‘லியோ’ எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ‘லியோ’ படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு இருப்பதற்கு முதல் காரணம் இது தளபதியின் படம். இரண்டாவது காரணம் லோகேஷ் கனகராஜ்,  ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களை போல ரத்தம் தெறிக்கும் ரக சினிமாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதால், இந்தப்படமும் ஹாலிவுட் படம் அளவுக்கு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

அதற்கு ஆதாரமாக அனிருத் இசைவேறு என எதிர்ப்பார்ப்புகளுக்கான எல்லா அம்சமும் ‘லியோ’வில் உள்ளது. லியோ படம் ‘ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று சொல்லப்பட்டு வந்தது. அந்த கதையில் தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் என்ன மேஜிக் செய்திருப்பார்கள் என்று மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

‘லியோ’ படத்தை தனது டீமுடன் இணைந்து புரோமோட் செய்து வந்த லோகேஷிடம், ரசிகர்கள் இந்த படத்தில் ‘LCU’விற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டதற்கு காத்திருந்து பாருங்கள் எனக் கூறினார். மேலும், முதல் 10 நிமிடத்தை தவற விட்டு விடாதீர்கள் என்று சொல்லி இருந்தார். இதற்கு மத்தியில், தமிழ் நாட்டில் மட்டும் தொடர்ந்து ரிலீஸ் பிரச்சனைகளை சந்தித்து வந்தது.

இசை வெளியீட்டு விழா ரத்து, தியேட்டர் பிரச்சனை, டிக்கெட் முன்பதிவில் குளறுபடிகள் என தொடர்ந்து பல இன்னல்களைக் கடந்து இன்று வெளியாகிய ‘லியோ’வை தளபதி விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டை தவிர்த்து, பிற மாநிலங்களிலும், நாடுகளிலும் ‘லியோ’ காலை 4 மணிக்கே வெளியாகி விட்ட நிலையில், விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 9 மணிக்கு பிறகே தமிழ் ரசிகர்கள் விமர்சனங்கள் தெரிய வரும். கீழே சில டிவிட்டர் விமர்சனங்களைப் பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.