அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகரின் வசூலை பின்னுக்கு தள்ளி லியோ செய்த புதிய சாதனை!

‘லியோ’ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்கள், படத்தின் டிரெய்லர், ஃபர்ஸ்ட் சாங் படத்தின் போஸ்டர் என எல்லாவற்றையும் கொண்டாடி வந்தனர்.

படம் எப்போ வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து படம் வெளியாவதிலும் பிரச்சனைகள் ஏற்பட்டது. படம் அக்.19 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ரீலிஸ் தேதி நெருங்கிய பின்பும் முன்பதிவில் பிரச்சனை என தொடர்ந்து ‘லியோ’ திரைக்கு வருவதில் பிரச்சனை இருந்து வந்தது. தளபதியை ஸ்கீரினில் பார்த்தால்தான் நிஜம் என்ற நிலைக்கு போனது ‘லியோ’ படம். தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில், 4 மணி முதல் ஷோ திரையிடப்பட்டது.

தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு தான் முதல் ஷோ என அறிவிக்கப்பட்டது. வெறுப்படைந்த ரசிகர்கள் பலரும், பிற மாநிலங்களுக்கு படையெடுத்தனர். இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியில் வெளி வந்தாலும், தமிழ் நாட்டில் ஆரவாரத்தோடு மக்கள் ‘லியோ’வை வரவேற்றனர்.

படம் வெளியான பின், கலவையான விமர்சனத்தையே சந்தித்து வருகிறது. நடிகர் பட்டாளத்தையே இந்த படத்திற்காக இறக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் சரிவர பயன்படுத்தவில்லை. அர்ஜூன் போன்ற ஆக்‌ஷன் கிங்கை படத்தில் ஒரு கட்டத்தில் கூட மாஸாக காட்டவில்லை.

சஞ்சய் தத், அனுராக் கஷ்யப் என பலரும் படத்தில் வருவதும், தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. நல்ல முறையில் நடிகர்களை பயன்படுத்தி இருந்தால் படம் மேலும் வெற்றியடைந்திருக்கும். படத்தின் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு. பிற்பாதியில் இல்லை.

தளபதி விஜய் பிளஸ் லோலேஷ் கனகராஜின் ‘LCU’ இரண்டும் சேர்ந்து சிறப்பான சம்பவமாக இருக்க போகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று அதிருப்தியை அளித்தது. எப்படியானாலும் ‘லியோ’ தளபதியின் ‘ஒன் மேன் ஷோ’ என அவரது ரசிகர்கள் பாரட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ‘லியோ’ சாதனை படைத்து வருகிறது. லியானார்டோ டி காப்ரியா நடித்து வெளியாகி இருக்கும் ‘Killers Of The Flower Moon’ படத்தை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை படைத்து வருகிறது. அமெரிக்காவில் ‘லியோ’ இந்திய ரூபாய் மதிப்பில், 41 கோடியே 20 லட்சத்தை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews