வெளிநாட்டில் களைகட்ட தொடங்கிய லியோ புக்கிங்! 10 நிமிடத்தில் எல்லாம் காலியா?

தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் புக்கிங் தற்பொழுது இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. புக்கிங் ஓப்பன் செய்யப்பட்ட பத்து நிமிடங்களில் 90 சதவீதம் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லியோ படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 40 நாட்களுக்கு மேலாக இருக்கும் நிலையில் இப்போதே டிக்கெட் ஓப்பன் செய்ததில் இருந்து லியோ மீதான ரசிகர்களின் ஆர்வம் குறித்து அறிய முடிகிறது.

மேலும் விஜய் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகளுக்காக டிக்கெட்கள் முன்னதாக திறக்கப்பட்டிருந்தாலும் ஜெனரல் ஆடியன்ஸ்களுக்கான டிக்கெட்கள் முதல்முதலில் இங்கிலாந்தில் தான் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து லியோ தயாரிப்பாளர் லலித் அவர்களிடம் லியோ ரிலீஸிற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் எதற்கு இன்னும் படத்தின் புரொமோஷன் தொடங்கவில்லை என கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்க்கு அவர் புரொமோஷன் குறித்து பல பிளான்கள் போடப்பட்டுள்ளதாகவும், புரொமோஷன் வர தொடங்கிவிட்டால் அடுத்தடுத்து அப்டேட் வந்து கொண்டே இருக்கும் படம் ரிலீஸ் ஆகும் வரை வேற லெவல் அப்டேட் தான் என கூறியுள்ளார்.

வாரத்திற்கு ஒரு அப்டேட் என புரொமோஷன் இல்லாமல் தொடர்ந்து அப்டேட் வரும் என்றும் ரிலீஸ் வரை லியோ பேச்சாகத்தான் இருக்கும் என லலித் கூறியுள்ளார். புரொமோஷன் குறித்து புது யுக்தியை தயாரிப்பு நிறுவனம் கையாண்டு வரும் நிலையில் தினம் தினம் லியோ குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் லியோ இசையமைப்பாளர் படம் குறித்து தரமான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். முன்னதாக லியோ படத்தில் இருந்து நா ரெடி தான் பாடல் வெளியாகி மாஸ் காட்டியது. அதை தொடர்ந்து இரண்டாவது சிங்கள் இன்னும் வர வில்லை. அது குறித்து அனிருத்திடம் கேட்ட போது அடுத்த வாரம் பாடல் கண்டிப்பாக வெளியாகும் என்றும் அதற்கு தான் தற்பொழுது வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

10 வருடங்கள் கழித்து மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்!

முழு படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்காத நிலையில் இந்த பாடல் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த இரண்டாவது பாடல் விஜய் – திரிஷா இடையே ஆனா காதல் பாடலாக இருக்குமா அல்லது தீம் பாடலாக இருக்குமா என குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாடல் வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருந்து கொண்டாட வேண்டும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...