ஆன்மிக ரீதியாக எலுமிச்சை கனியின் மகத்துவம்

அம்மன் வழிபாட்டில் எலுமிச்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எலுமிச்சையை தேவகனி என்று அழைப்பார்கள்.

காளியம்மன், மாரியம்மன் என்று அனைத்து கோவில்களிலும் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.

தீய ஆவிகளை விரட்டவும் எலுமிச்சை பயன்படுகிறது. ஒருவர் புதிய வாகனம் வாங்கும்போது  எலுமிச்சை பழத்தை வைத்து டயரில் முதல் முதல் வைத்து நசுக்கிதான் தங்கள் காரை எடுப்பர். ஒரு தாந்த்ரீக பூஜை நடக்கும்போது அந்த பூஜைக்கு பலி கொடுப்பதற்காக எலுமிச்சையில் சிறிது குங்குமம் தடவி அதை எறிந்து விட்டுதான் பூஜையை வேத விற்பன்னர்கள் தொடங்குவர்.

கோயில்களில் கூட, திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

அம்மனின் வடிவமான எலுமிச்சை கனியை அம்மனின் பாதங்களில் வைத்து நாம் எடுத்து வந்தால் நமக்கு எல்லாமே சுபிட்சமாக நடக்கும் என்பதும் நம்பிக்கை.

எந்த ஒரு மங்களகரமான விசயத்துக்கும் எலுமிச்சையை பயன்படுத்துவது சிறப்பு.

இப்படியாக எலுமிச்சையில் பல மகத்துவங்கள் ஆன்மிகரீதியாக உள்ளன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews