ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை இயற்ற சட்டசபைக்கு உரிமை உண்டு: அப்பாவு

தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவுக்கு சட்டமன்றத் தகுதி இல்லை என்று கவர்னர் ரவி அவர்கள் திருப்பி அனுப்பிய ஒரு நாள் கழித்து, சபாநாயகர் அப்பாவு, ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று வலியுறுத்தினார்.

“ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய கவர்னர் என்ன சட்டத்தை பயன்படுத்துகிறார் என தெரியவில்லை.ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை அமல்படுத்த தமிழக சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது.சரியான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ,” என அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆன்லைன் ரம்மி என்பது திறன் விளையாட்டு அல்ல, ‘கொலை விளையாட்டு’ என்று கூறிய அப்பாவு, “சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று அவர் மீது சில அழுத்தம் உள்ளதாவும் கூறினார்.

இதனிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் ஒரு மசோதாவை நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக மீண்டும் ஒருமுறை அனுப்ப மாநில அரசு முடிவு செய்தது.

தமிழகத்தில் திராவிட கட்சிகள் பாஜகவை நம்பியே உள்ளன: அண்ணாமலை

தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மார்ச் 20ம் தேதி கூடி, கூட்டத்தொடரின் காலம் பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.