News
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியில்லை: சமீபத்தில் கட்சி ஆரம்பித்த நடிகர் பேட்டி!
சமீபத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்த தமிழ் நடிகர் ஒருவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தானும் தனது கட்சியும் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்
சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை சமீபத்தில் ஆரம்பித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் மிக குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டதால், தன்னுடைய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய காலம் கிடைக்கவில்லை என்றும், அதனால் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்
மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டொன்றுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்
நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்திருந்தால் கூட அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் தற்போது அவர் அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்துள்ளதால் போட்டியிடும் வாய்ப்பை இழந்ததாகவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்
