மே 10 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !!

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி பட்ஜெட் மற்றும் 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது சபாநாயகர் அப்பாவு தலைமையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதன்பின்னர் கடந்த 24 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயக்கர் அப்பாவு தலைமையில் நடைபெற்று முடிந்தது.

இதல் தமிழகத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 6- ஆம் தேதி தொடங்கி துறை ரீதியான மாநில கோரிக்கையை விவாதம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி மே மாதம் 6 ஆம் தேதி நீர்வள துறை மானியக்கோரிக்கை தொடங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைரீதியான மாநிலக்கோரிக்கை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மே 9 ஆம் தேதி காவல்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளது. மேலும், சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில் வருகின்ற 10 தேதி வரை  சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment