ஏப்ரல் 6 முதல் சட்டப்பேரவை கூட்டம் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !!
இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி மீண்டும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்து நாட்களிலும் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் உண்டு என அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் எனக்கு தகவல் தெரிவித்துவிட்டே வெளியில் சென்றபோது இவறை காரணம் காட்டி அதிமுக வெளிநடப்பு செய்தது தேவையில்லாதது என அவர் தெரிவித்தார்.
இதனிடையே வருகின்ற மார்ச் 30ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைறுவதால் கூட்டத்தில் சட்டப்பேரவை தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அப்பாவு தெரிவித்தார்.
இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து முடிவி செய்யப்படும் என அவர் கூறினார்.
ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடத்தில் மீண்டும் பேரவை செயல்படுமா? என்ற கேள்விக்கு, எடுத்தோம் , கவிழ்த்தோம் என எதையும் செய்துவிட முடியாது என கூறினார். மேலும், மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பல அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
