தீவிர முருக பக்தராக இருந்து கிறிஸ்தவ சாதுவாக மாறிய பழம்பெரும் நடிகர்.. சிவாஜிக்கே டஃப் கொடுத்த ஏவிம் ராஜன்

1960-களில் முப்பெரும் ஹீரோக்கள் தமிழ் சினிமாவை ஆண்ட சமயம். நடிப்புக்கு சிவாஜி கணேசன், புரட்சிக்கு எம்.ஜி.ஆர்., காதலுக்கு ஜெமினி என கலக்கிய காலகட்டத்தில் மூவரின் நடிப்பு கலந்தால் எப்படி இருக்குமோ அப்படி நடிக்க வந்தவர்தான் ஏ.வி.எம்.ராஜன். புதுக்கோட்யைச் சொந்த ஊராகக் கொண்ட  ஏ.வி.எம். ராஜனின் முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.

பெயர் சொல்லும்படியாக இவரின் நடிப்பில் 1965ல் வெளிவந்த ‘என்ன தான் முடிவு?’ ’வீர அபிமன்யு’ படங்கள்.மேலும் 1966ல் பாலச்சந்தர் இயக்கிய மேஜர் சந்திரகாந்த் படத்தில் ரஜினிகாந்த் என்ற பாத்திரம். இந்தப் பெயரைத்தான் பின்னால் சிவாஜி ராவுக்கு ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகப்படுத்தியபோது பாலச்சந்தர் வைத்தார்.

1967ல் ’பந்தயம்’ படம் – ஜெமினியுடன் இணைந்து நடித்தார்- இந்த படம் ஏ.வி.எம். ராஜனை முன்னணி நாயகனாக உயர்த்தியது. ’கற்பூரம்’ படத்தில் புஷ்பலதாவும் இவரும் அற்புதமாக நடித்தார்கள். ஏ.வி.எம் ராஜன் -புஷ்பலதா நாடகக்குழுவின் நாடகம் தான் படமானது. ஏ.வி.எம் ராஜன் -புஷ்பலதா ஜோடி நடித்த சில படங்கள் அவர்களின் சொந்தத்தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சக்கரம்’ படத்தில் ஜெமினி கணேஷ், நாகேஷ் என்று ஜாம்பவான்கள் இருக்க ஆனால் ஏ.வி.எம்.ராஜன் அவர்களையெல்லாம் அந்தப் படத்தில் தனது நடிப்பில் ஓவர் டேக் செய்து விட்டார் என்று சொன்னால் அது மிகையேயல்ல. ’துணைவன்’ ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தேவர் படம்.அதில் கதாநாயகன் ராஜன் முருகபக்தன்.

முன்னணி நடிகர்களே இல்லாமல் பாக்யராஜ் செய்த மகத்தான சாதனை.. திரைக்கதையின் பிதாமகனாக ஜொலித்தது இப்படித்தான்

சிவாஜியுடன் ’கலாட்டா கல்யாணம்’, சிவாஜிகணேசன் – பத்மினி இணைந்து நடித்த கலைக்காவியமான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில், சிவாஜிகணேசனுடன் இணைந்து நாதசுரம் வாசிக்கும் காட்சியில் அற்புதமாக நடித்தார். மேலும் எம்ஜிஆருடன் ’எங்கள் தங்கம்’ ‘அன்னையும் பிதாவும்’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நடிப்புச் சுடர் என்ற பட்டத்தைப் பெற்றார்.

ஜெய்சங்கருடன் இவர் நடித்த மன்னிப்பு படத்தில் யாருக்கு முதலில் டைட்டில் கார்டு போடுவது என்ற ஈகோவால் இப்படத்தில் நடிகர்களுக்கு டைட்டில் கார்டே போடவில்லையாம்.

பெந்தகோஸ்த் கிறிஸ்தவர் ஆக மாறும் மனநிலையில் ‘ஏசுவின் அடிமை’ என்றே தன்னைப் பற்றி பிறகு ராஜன் சொல்லிக்கொண்டார். ‘ஏவிஎம் ராஜன் செத்துவிட்டான். நான் இப்போது ஏசுவின் அடிமை என்றார். பின்னாளில் ஏவிஎம் ராஜன் தூய வெள்ளையுடையில் வெய்யிலுக்கு ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு எளிமையுடன் நடந்துபோவதைப் பார்த்த இவரது நண்பர் நடிகர் கல்யாண்குமார் தான் தன் நண்பனிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை அன்று உணர்ந்தார். ஆம் ஏ.வி.எம்.ராஜன் என்ற அழகான ஒரு நடிகன் ஆடி ஓய்ந்தபின் ஆன்மீகத்தில் உண்மையாக மூழ்கி ’சாது’வாகிறதென்பது ஒரு நிகழ்வு.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.