ஈகோவை விட்டு விடுங்கள்.! பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது..!! மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைவோம்…!!!
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றியானது 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு உதவும் என்றும் பலரும் கூறுகின்றனர்.
ஏனென்றால் 2024ம் ஆண்டு பிரதமருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க பலரும் கூட்டணிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இவ்வாறு கூட்டணிகள் அமைக்க உள்ள நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட்டணி பற்றி பேசியுள்ளார். அதன்படி பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் வராத வகையில் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ஈகோவை விட்டு விட்டு பாஜகவிற்கு எதிராக பிற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். மத உணர்வுகளை பாஜக அரசியலுக்காக பயன்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கோயம்புத்தூரில் பேட்டி கொடுத்தார்.
