Connect with us

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

பள்ளிகள் விடுமுறை

தமிழகம்

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

நம் தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவமழை போதுதான் கனமழை பெய்யும். ஆனால் தற்போது தென்கிழக்கு மழையின் போது மழையின் தாக்கம் சற்று தமிழகத்திற்கு அதிகமாக கிடைத்துக் கொண்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து கொண்டு வருகிறது. வானிலை ஆய்வு மையமும் இதற்கு முன்பாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனால் ஒரு சில இடங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நேற்றைய தினம் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த விடுமுறையானது இன்றைய தினமும் தொடர்வதாக தெரிகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறையை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top