Connect with us

அடுத்தடுத்து 5 நாட்களுக்கு லீவு… ஏடிஎம்-ல பணம் எடுத்து வச்சிக்கிட்டீங்களா?

விடுமுறை

தமிழகம்

அடுத்தடுத்து 5 நாட்களுக்கு லீவு… ஏடிஎம்-ல பணம் எடுத்து வச்சிக்கிட்டீங்களா?

அடுத்தடுத்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. பல பண்டிகைகளை அடுத்து, பல மாநிலங்களில் உள்ள வங்கிகள் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இந்த விடுமுறை நாட்களில், பொது/தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளின் கிளைகளும் மூடப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் 12ம் தேதி ஆன இன்று ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொச்சி, மும்பை, நாக்பூர், டெல்லி உள்ளிட்ட 31 நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் அடுத்தடுத்து 3 நாட்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ம் தேதி பார்சி புத்தாண்டை முன்னிட்டு பேலாபூர், மும்பை, நாக்பூர் நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அடுத்தடுத்து 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் மக்கள் சொந்த ஊருக்குச் செல்வது, பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை என பல விஷயங்களுக்கு பணத்தை செலவிட்டு வருகின்றனர். எனவே ஏடிஎம்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் முன்கூட்டியே வங்கிகள் அல்லது ஏடிஎம்.களில் தேவையான அளவு பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top