25 சர்வதேச விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை – ஒன்றிய அரசு!!

தேசிய மனமாக்கள் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டிற்குள் 25 சர்வதேச விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மானியங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் தேசிய பணமாக்கல் திட்டத்தினை கடந்த ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அறிவித்து இருந்தார்.

இதில் 2025-ம் ஆண்டிற்குள் 25 சர்வதேச விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படுவதாக உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே சிங் மாநிலங்களவையில் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே தனியாருக்கு குத்தகைக்கு விட அடையாளங்கள் காணப்படும் விமான நிலையங்களில் தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களும் சேரும்.

குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களும் இடம்பெற்றுள்ளது. அதே போல் திருப்பதி, ராஜமுந்திரி, விஜயவாடா உள்ளிட்ட 25 விமான நிலையங்களும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.