Connect with us

நேற்று திருவண்ணாமலையில், இன்று தலைநகரில்! வரிசையாக கசிந்து வரும் வினாத்தாள்!

paper leak 647

தமிழகம்

நேற்று திருவண்ணாமலையில், இன்று தலைநகரில்! வரிசையாக கசிந்து வரும் வினாத்தாள்!

நேற்று திருவண்ணாமலையில், இன்று தலைநகரில்! வரிசையாக கசிந்து வரும் வினாத்தாள்!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். இந்த பொதுத் தேர்வை எதிர்கொள்ளும்  மாணவர்களுக்கு அதற்கு முன்னதாகவே திருப்புதல் தேர்வு போன்றவைகள் நடத்தப்படும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு திருப்புதல் தேர்வு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நடந்துகொண்டு வருகிறது. இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி நேற்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் கசிந்தது. கசிந்த வினாத்தாளே இன்று மாணவர்களுக்கு தேர்வுக்கு கொடுக்கப்பட்டது.

அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் வினாத்தாளும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கணித வினாத்தாளும் நேற்று வெளியானது. இதுகுறித்து தேர்வுத்துறை விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் மற்றுமொரு இடத்தில் மீண்டும் பன்னிரண்டாம் வகுப்பு வினாத்தாள்கள் கசிந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் சென்னையில் இன்று கசிந்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் நேற்று வெளியான நிலையில் இன்றும் வெளியானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top