அய்யய்யோ… என்னங்க பேரவையில் எடப்பாடி இப்படி பண்ணிட்டாரு… ஷாக்கான அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

கிருஷ்ணகிரி ஆணவ கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகேயுள்ள கிட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் கடந்த 21ம் தேதி அன்று பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகன், முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சரண்யாவை கடந்த ஜனவரி மாதம் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரும் ஒரே சமூகத்தினர் என்றாலும், சரண்யாவிற்கு வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருந்ததால் அவரை திரும்ப அனுப்பிவிடும்படி பெண் வீட்டார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இதற்கு ஜெகன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்யாவின் தந்தை சங்கர் மருமகன் ஜெகனை வெட்டிக்கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது.

முதல்வர் விளக்கம்:

தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி கிட்டாம்பட்டியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் சங்கர் உள்ளிட்ட மூவர் ஆயுதங்களால் தாக்கியத்தில் ஜெகன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக காவேரிப்பட்டினம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ஜெகன், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி சரண்யாவை பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் தான் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கர் அவதானம்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் என்பது காவல்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக நீதி மண்ணான தமிழகத்தில் இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மனித நேய அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைவிடுத்தார்.

அதிமுகவினர் அமளி:

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி இளைஞர் ஜெகன் கொலை வழக்கில் கைதான பெண்ணின் தந்தை சங்கர் அதிமுக நிர்வாகி என்பதை இரண்டு முறை சுட்டிக்காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதல்வர் பேசி முடித்ததும் அதிமுகவினர் கூச்சலிட ஆரம்பித்தனர்.

அதிமுக தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் முனுசாமி, கோவிந்தசாமி அருண்மொழி தேவன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரான துரைமு ருகன்காவல்துறையின் விசாரணையில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாளை மாற்று கருத்து வரும் எனில் அந்தத் திருத்தம் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் திருப்பி பேரவையில் வாசிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.