Connect with us

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை.!!

உள்ளூர் விடுமுறை

தமிழகம்

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை.!!

இன்றைய தினம் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருவதால் இத்தகைய அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

ஏனென்றால் அங்கு அதிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இத்தகைய முடிவினை அவர் கூறியுள்ளார். இவ்வாறு கனமழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆடிப்பெருக்கு மற்றும் இதர காரணங்களினால் ஒரு சில இடங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு இத்தகைய விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top