Entertainment
மோசமான அவார்டுகளைப் பெற்ற லாஸ்லியா-கவின்-சாண்டி!!
நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, இந்த வார தலைவர் பதவிக்கான நாமினேஷன் நடந்தது.
சிறப்பு விருந்தினராக உள்ளே பங்கேற்றுள்ள அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு அவார்டு வழங்க வேண்டும் என பிக் பாஸ் கூறினார். அதேபோல இவர்கள் மூவரும் தேர்ந்தெடுத்து அவார்டுகளை வழங்கினர்.

முதல் அவார்டாக பச்சோந்தி போன்று போலியானவர் விருது லோஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது. இதனை மேடையில் ஏறி வாங்கிய லாஸ்லியா கீழே தூக்கி எறிந்துவிட்டார்.
இது தனக்கு அவமரியாதையாக உள்ளது அதனால் ஷாக்சி, நான் விருதினை வழங்க மாட்டேன் என்று கூறினார். இதனால் லாஸ்லியா ஷாக்சியிடம் சண்டையிடத் துவங்கினார்,
அதன்பின்னர் நரி விருது சாண்டிக்கு வழங்கப்பட்டது. அதாவது ஸ்கெட் போட்டு சுயநலமாக அவர்களுக்கு சாதகமானவர்களை விடுத்து மற்றவர்களை நாமினேட் செய்வது, அவர் செய்த தவறினை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை, மாறாக அவரும் மோகன் வைத்யாவினை அவமானப்படுத்தும் வகையில், ஊ என்று கூறிவிட்டு, ஊளை எப்படி இருந்தது என்று கேட்டு அவமரியாதை செய்தார்.
அதன் பின்னர் தவளை விருது கவினுக்கு வழங்கப்பட்டது, அவர் எப்போது வாயை சும்மா வைத்திருந்தார், கஸ்தூரிக்கு பட்டப் பெயர் வைப்பது, சேரனை நக்கல் செய்வது, அனைத்து பெண்களிடமும் ப்ரோபோஸ் செய்வது என வாயினால்தானே கெட்டுள்ளார்.
