Connect with us

லாஸ்லியா வெளியேறக் கூடாது- வீ ஆர் த பாய்ஸ் கேங்க்!!

Entertainment

லாஸ்லியா வெளியேறக் கூடாது- வீ ஆர் த பாய்ஸ் கேங்க்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துள்ளது. நாட்கள் ஆக ஆக, பரபரப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், வார இறுதியான நேற்று கமல் ஹாசன் எவிக்ஷன் பற்றிய பேச்சைத் துவங்கினார். சேரன், கவின், லோஸ்லியா, முகென், ஷெரின் ஆகியோர் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் பட்டியலில் இருந்தனர்.

aec21e7ac1ca10f76b25833ec239f22f-2

கமல்ஹாசன் எவிக்ஷன் குறித்து கேட்கையில், முகின் நிச்சயம் வெளியேற மாட்டேன் என்றார். அடுத்து ஷெரின் நெர்வசாக இருப்பதாக தெரிவித்தார்.

 லோஸ்லியா வெளியில் செல்ல தயாராக உள்ளதாக கூறினார். கவின் வெளியேற ரெடி ஆகிவிட்டேன். எதுவாக இருந்தாலும் நான் ரெடி என்றார்.

சேரனும் தான் வந்ததற்கான நோக்கம் நிறைவேறிவிட்டது, செல்லத் தயார் என்றார்.

தன்னம்பிக்கையோடு இருந்த முகின் காப்பாற்றப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்தார், அதன்பின்னர், இன்னொருவரையும் காப்பாற்றலாமே என்று கூறி, ஷெரினும் காப்பாற்றப்படுவதாக அறிவித்தார்.

அதன்பின்னர் கவினும் காப்பாற்றப்படுவதாக அறிவிக்கப்பட, மீதமுள்ள நிலையில், லாஸ்லியா- சேரன் இருவரில் யார் இருக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்க, வனிதா, ஷெரின் மட்டும் சேரன் இருக்கவேண்டும் என்றார்.

கவின், தர்ஷன், சாண்டி, முகென் ஆகிய நால்வரும் லோஸ்லியா இருக்க வேண்டும் என்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top