Entertainment
ஒருவழியாக பிக் பாஸ் வீட்டின் தலைவரானார் லாஸ்லியா!!
பிக் பாஸ் 3 ஆரம்பித்த சில நாட்களே ஆனதாகத் தெரிகையில், அதற்குள் 80 வது நாளை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் சேரன் வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டினை சோகமாக்கியது.
கேப்டன்சி டாஸ்க்கில் பங்குபெற பிக் பாஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது, அப்போது கேப்டன்சி டாஸ்க் வெளியேறாமல் தப்பிப்பதற்கான ஒரு வழியாகவே பார்க்கப்படுகிறது என வனிதா கூறினார்.

மேலும் உள்ளே இருப்பதில் பெரிதாக விருப்பம் இல்லை, நிச்சயம் இந்தமுறை நான் நாமினேட் ஆவேன், மக்கள் விரும்பினால் என்னை பாதுகாக்கட்டும் என்று கூறினார்.
ஆனால் பிக் பாஸ் நீங்கள் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்றார், சரி என்று கூறிய இவர், போட்டி தொடங்குவதற்கு முன்னரே விட்டுக்கொடுப்பதாக கூறி போட்டியிலிருந்து வெளியேறினார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே தர்ஷனும் தனக்கு கால் வலிப்பதாக கூறி போட்டியிலிருந்து விலகினார். லாஸ்லியா ஜெய்த்ததாக அறிவிக்கப்பட்டது.
தர்ஷன் ஏன் இவ்வாறு செய்தாய்? என்று லோஸ்லியா அவரிடம் கேட்டார். மேலும் இப்படி விட்டுக் கொடுத்து கிடைக்கும் விஷயம் தனக்கு பிடிக்கவில்லை என்றார்.
ஒருவழியாக 77 நாட்களைக் கடந்தநிலையில், லாஸ்லியா முதல் முறையாக பிக் பாஸ் வீட்டின் தலைவராகிவிட்டார்.
