AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வழக்கறிஞர்கள்.. எச்சரிக்கை விடுத்த சங்கம்..!

AI தொழில்நுட்பம் என்பது தற்போது உலகின் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாத துறையே இல்லை என்ற அளவுக்கு மிகப்பெரிய அளவில் பயன்பாடுக்கு வந்துள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் AI தொழில்நுட்பம் அனைத்து துறைகளுக்கும் சரியாக இருக்காது என்றும் ஒரு சில துறைகளுக்கு கச்சிதமான பயன்களை அளித்தாலும் சில துறைகளுக்கு AI தொழில்நுட்பம் தவறான தகவல்களை தருவதால் சில விபரீதங்கள் ஏற்படும் வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இரண்டு வழக்கறிஞர்கள் தங்களது வழக்கை வாதாடுவதற்காக AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சில தகவல்கள் பெற்றுள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. AI தொழில்நுட்பம் என்பது தற்போது வளர்ச்சி அடையும் ஒரு தொழில்நுட்பம் என்றும் அதை முழுமையாக நம்பி ஒரு வழக்கை நடத்தக்கூடிய அளவுக்கு தற்போதைய நிலை இல்லை என்றும் எனவே தொழில்நுட்பத்தின் மூலம் பெரும் தகவல்களை வைத்து வழக்கறிஞர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்து அதன் பின் தான் வாதாட வேண்டும் என்றும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கம் எச்சரித்து உள்ளது.

chat gpt vs google bardநியூயார்க் ஸ்டேட் பார் அசோசியேஷன் சட்ட ஆராய்ச்சியில் AI தொழில்நுட்பம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வழக்கறிஞர்களை எச்சரிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “சாட்போட்கள் ஆராய்ச்சிக்கான மதிப்புமிக்க கருவியாக இருக்கலாம், ஆனால் அவை மனித தீர்ப்புக்கு மாற்றாக பயன்படுத்தப்படக்கூடாது” என்று அறிக்கை கூறுகிறது. “சாட்போட்கள் சில நேரங்களில் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவலை உருவாக்கலாம், மேலும் வழக்கறிஞர்கள் அவர்கள் வழங்கும் தகவலை எப்போதும் இருமுறை சரிபார்க்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

AI தொழில்நுட்பம் இன்னும் சட்ட ஆராய்ச்சியில் மனித தீர்ப்புக்கு மாற்றாக பயன்படுத்த தயாராக இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ChatGPT அல்லது பிற AI சாட்போட்களைப் பயன்படுத்தும் வழக்கறிஞர்கள், தாங்கள் வழங்கும் தகவலை எப்போதும் இருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும், மேலும் அதை மட்டுமே ஆராய்ச்சிக்கான ஆதாரமாக நம்பக்கூடாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews