வழக்கறிஞர் செய்த தவறு!! மன்னிப்பு கேட்ட நீதிபதி..!!

தர்மபுரி மாவட்டத்தில் பாகபிரிவினை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிலத்தின் உரிமை கேட்டு 3 பெண்களிடம் எதிர்மனுதாரர் பண்பற்ற முறையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

குறிப்பாக மூன்று பெண்களின் தந்தைகளின் உரிமை குறித்தும், அவர்களுடைய தாய் அவமதிப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். இது சம்மந்தமாக மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது குறுக்கு விசாரணையில் நடைபெற்ற கேள்விகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பரதசக்கரவர்த்தி இதற்கு மன்னிப்பு கோரினார்.

அதோடு குறுக்கு விசாரணை என்பது மனுதாரரை காயப்படுத்தவோ அல்லது அவமான படுத்துவதற்காகவோ அல்ல என்ற ஒரு கருத்தினை தெரிவித்து உள்ளார்.

மேலும், பெண்கள் தங்களின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தினை நாடும் போது அவர்களின் நடத்தை குறித்து கேள்விகள் கேட்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.